Skip to main content

வாழ நினைத்தால் வாழலாம்

P.S : This was a story I wrote longggggg back.. Infact it can be called as my first story :D, I wrote it when i was around 14 years old... had posted this story in blog earlier as well.. but appo nammalai niraya perukku theriyaathu :D (shooo... ippa mattum theriyuma nu ketka koodathu :D) sari pudhu year la oru confidence boosting post podalamae nu pazhaiya post ah thoosi thatti date ah maathi munnadi kondu vanthu vachirukkaen :)

Wrote in taminglish and converted the same into tamil using this link



கோபால் நமது கதையின் நாயகன். வாழ்க்கையில் தோல்வியைத் தவிர வேறு எதையும் சந்தித்திராதவன்.அம்மா ஆசை போல் பிள்ளையாய் பிறந்தாலும் அம்மாவாசையில் பிறந்தவனாயிற்றே!! அவன் வாழ்வில் எல்லாமே கோளாறுதான். கோபாலது ஆசிரியர் 'கூழானாலும் குளித்து குடி' என்பார், ஆனால் கோபால் குளித்து விட்டு வருவதற்குள் அவன் கூழை வேறு யாராவது குடித்து விடுவார்கள். அவனது ஆசிரியர் 'குரைக்கிற நாய் கடிக்காது' என்பார். சரி ஆசிரியரே சொல்லிட்டாரே என ஆசிரியரை நம்பி இவன் குரைத்துக் கொண்டிருந்த நாய் மீது கல்லைத் தூக்கி போட, அந்த நாய் இவன் உடம்பில் ஒரு கால் கிலோவை குரைத்துவிட்டது. அவன் படித்ததெல்லாம் சரிதான், ஆனால் அதுதான் படிக்காத நாய் போலும். எல்லாம் அவனது தலைவிதி. இந்த சம்பவஙகளுக்குப் பிறகு ஆசிரியர் சொல்வது எதையும் கேட்கக்கூடாது என்று தீர்மானித்து விட்டான்.ஆனாலும் அவனது விதி அவனை விடாது துரத்திக்கொண்டிருந்தது. வகுப்பறையில் ஆசிரியர் கரும்பலகையில் ஏதேனும் ஒரு திருக்குறளை எழுதி விட்டு, கோபாலிடம் இதை எழுதியவர் யாரென கேட்பார்.கோபாலும் பரிவுடன், 'நீங்கதான் சார் கொஞ்ச நேரம் முன்னாடி எழுதினீங்க' என்று அன்புடன் கூறுவான். இவனது பரிவை புரிந்து கொள்ள முடியாத ஆசிரியரோ , இந்த பையன் நம்மை நக்கலடிக்கிறான் என்றென்ணி இவனை வகுப்புக்கு வெளியே துரத்தி விடுவார்.இது போல ஏதாவது ஒரு பிரச்சினை இவனை வாட்டிக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு முறையும் தேர்வு மதிப்பெண் வாங்கிச் செல்லும்போதும் வீட்டில் யுத்தமே நடக்கும்.கோபாலது பெற்றோரோ தங்கள் பையன் அனைத்திலும் முதலாவதாக வரவேண்டும் என்று விரும்புவர். ஆனால் கோபால், பள்ளியில் இருந்து வெளியே வருவதில் வேண்டுமானால் முதலில் இருப்பானே தவிர, மற்றபடி பாடங்களில் எல்லாம் கடைசியில் இருந்து பார்த்தால்தான் இவன் முதல் நிலைக்கு வர வாய்ப்பு இருக்கிறது. இறுதி தேர்வில் மட்டும் எப்படியாவது திக்கித் திணறி தேறி விடுவான். அதுவும் அவனது அப்பா 'நீ பரிட்சையில் பாஸ் பண்ணலேனா உன்னை மாடு மேய்க்க அனுப்பி விடுவேன்' என்ற மிரட்டலுக்கு பயந்துதான்.


இப்படி நாளொரு மேனியாவுடனும் பொழுதொரு வருத்ததுடனும் கோபாலது வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.இல்லை..இல்லை..அவனை பொறுத்தவரை நொண்டி நொண்டி போய்க்கொண்டிருந்தது. தற்பொழுது பத்தாம் வகுப்பு முடிவுகளை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தான். அன்றுதான் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. காலையில் இருந்து ரிசல்ட் பயத்திலேயே உலாவிக் கொண்டிருந்தான். அவன் தந்தை வேறு 'ஒழுங்கா மதிப்பெண் வாங்கலைனா ஏதேனும் திருவிழாவிற்கு கூட்டிட்டு போய் தொலைச்சிடுவேன்' என்று மிரட்டி உள்ளார். அதனால் ஒரு கவலையுடனே தான் வீட்டில் இருந்து கிளம்பினான். பள்ளிக்கு அருகில் உள்ள பேப்பர் கடைக்கு சென்றான். அங்கு அவனது நண்பர்கள் அரட்டையடித்துக் கொண்டிருந்தனர்.யாரையும் கண்டுகொள்ளாமல் மெதுவாக ஒரு பேப்பரை வாங்கி கொண்டு தனது பதிவு எண்ணைத் தேடினான். ஆகா..! இதோ இருக்கு.. ஆனா என்ன...அவன் நண்பர்கள் பலரோட பேர் தான் விடுப்பட்டு போயிருந்தது. "பாவம் அவர்கள்" என்று நினைத்தபடி அவர்களருகே சென்று "என்னங்கடா, பாஸான என்னை விட பெயிலான நீங்க ஜாலியா இருக்கீங்க" என்றான். அனைவரும் பேசுவதை ஒரு கணம் நிறுத்தி விட்டு இவனைப் பார்த்து, இவனை பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்தனர். பாலாஜி சிரிப்பை அடக்கியபடி, "போய் மறுபடி சரியா பாருடா என்றான்". ஒரு கணம் திடுக்கிட்ட கோபால் மறுபடி சென்று செய்திதாளைப் பார்த்தான். அவனது எண்தான், சரியாகத்தான் இருந்தது. கம்பீரமாக தலை நிமிர்ந்த கோபாலுக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. "தேர்வில் தவறியவர்கள் எண் என்ற தலைப்பில் இவனது எண் இருந்தது.ஒரு கணம் முறுக்கிய மீசையுடன் மிரட்டிய அப்பாவை எண்ணிப் பார்த்தான். ஒரு Full பாட்டில் விஸ்கி அடித்தமாதிரி இருந்தது.



நிலை தடுமாறி செய்வத்றியாது வீட்டிற்க்கு வெகு தொலைவில் உள்ள பூங்கா ஒன்றிற்கு சென்றான். தனது நிலையை எண்ணிப் பார்த்தான். அப்பா எப்படியும் செம காரமா திட்டித் தீர்த்திடுவார். அடிச்சாலும் ஆச்சரியம் இல்லை... அதுவானா பரவல்ல.. இந்த அம்மா மெகா சீரியல் மாதிரி சென்டிமென்டலா பேசியே ஒரு வழி பண்ணிடுவாங்க. இதை விட கொடுமை, அக்கம் பக்கத்துல என்னமோ அவங்கதான் என்னை படிக்க வைத்த மாதிரி, துக்கம் விசாரிப்பாங்க. இதெல்லாம் தேவையா... அதுக்கு பேசாம தற்கொலைப் பண்ணிக்கலாம். வாழ்ந்தால் மானத்தோட வாழனும்னு வள்ளுவர் ஏதோ ஒரு குறள்ல சொல்வாரே....அது என்ன?? ம்ம்.....'தோன்றின் புகழோடு..' அப்புறம் ஏதோ வருமே...''அடச்சே... இப்போ அதுதான் ரொம்ப முக்கியம்.... வாடா மச்சான் வயசுக்கு வந்துட்டே...கோட்டு அடிச்சு Suicide பண்ணிகிட்டே'....ஒரு புதிய தைரியத்துடன் மனம் அழைத்தது.. 'அதுதான் சரி...உதவாக்கரை என ஊரின் பழிச்சொல் கேட்பதற்கு தற்கொலையே மேல் - முடிவு செய்தான் கோபால்.

சரி எப்படி தற்கொலைப் பண்ணிக்கலாம் என்று யோசிக்க தொடங்கினான். 'பேசாம பேன்ல தூக்கு போட்டுக்கலாமா?' 'வேண்டாம்..வேண்டாம்.. நம்ம வெயிட் தாங்காம பேன் விழுந்துடுச்சுன்னா அப்பா கொன்னுடுவாரு'..'அப்போ பால்ல விஷத்தை கலந்து குடிக்கலாமா?'...'அய்யோ வேணவே வேணாம்..தப்பித் தவறி வேறு யாராவது அந்த பாலை குடிச்சிட்டாங்கன்னா முன்னே சொன்ன தூக்கை அரசே நமக்கு போட்டு விட்டுடும்..' 'கிணத்துல விழலாம்னா நமக்கு வேற நீச்சல் தெரியாது...'...'இவ்வாறு பலவறாக யோசித்த கோபாலது கண்ணில் தூரத்தில் தண்டவாளம் தெரிந்தது. காசு செலவழிக்காம இலவச தற்கொலைக்கு இரயில் தான் ஒரே வழி' என்று ஒரு வழியாக முடிவுக்கு வந்தான்.

மாலை ஆறு மணியாதலால் வானம் மெல்ல இருட்டத் தொடங்கியது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்ததால் அந்நேரம் அங்கு யாருமில்லை. இதுதான் சரியான சூழ்நிலை என்று கோபால் முடிவுக்கு வந்தான். சரியாக மணி 6:25 க்கு அந்த வழியாக திருச்சி ரெயில் வருவதை தினம் பார்த்து இருக்கிறான். 'நடடா தன்மான சிங்கமே! உன்னை உதாசீனபடுத்திய உலகை நீ உதாசீனபடுத்து" என்று மனம் ஊக்கமளிக்க தண்டவாளம் இருக்குமிடத்தை இருபது நிமிடங்களில் அடைந்தான்.

மணி 6:20. தண்டவாளத்தில் தலையை வைத்து உடலை குறுக்க கிடத்தி படுத்துக்கொண்டான். மனதுக்குள் எல்லா கடவுளையும் வேண்டிக்கொண்டான். இன்னும் 5 நிமிடம் தான். பின்னர் எல்லா தொல்லையில் இருந்தும் விடுதலை.

'ம்ம்ம்... எமலோகம் போன உடனே நமக்கு சொர்க்கம் கொடுப்பாங்களா இல்லை நரகம் கொடுப்பாங்களா?...சொர்க்கம் போனா அங்கே ரம்பை ஊர்வசி நாட்டியம் பார்க்க முடியுமா?"..."அது சரி, இப்போ ஏன் ரம்பா தமிழ் படத்திலே நடிக்கிறதில்லை??'......
'ரொம்ப முக்கியம்..போடாங்க.... கம்முன்னு கிட..யாரு நடிச்சா என்ன நடிக்கலைனா நமக்கென்ன?'...

மணி 6:22.. வெகு தொலைவில் இரயில் கடக்..கடக்..என்ற சத்தத்தோடு வருவதை உணர்ந்தான்.கோபாலது மனம் லேசாக படக்..படக்..கென்று அடித்துக் கொண்டது. ' இந்நேரம் நம்மளை காணாம அப்பாவும் அம்மாவும் கவலைப்படுவாங்களோ' ..'நல்லாக் கவலைப்படட்டும்...எவ்வளவு திட்டிருப்பாங்க....நல்லா வேணும்.' என நினைத்துக் கொண்டான். '

இன்னிக்கு என்ன கிழமை...அட இன்னிக்கு புதன் கிழமை..இன்றைய மெனு இட்லி சாம்பார் ஆச்சே...அம்மா நல்லா பூ போல இட்லி சுட்டு நெய் கலந்து தருவாங்களே..' நினைக்கும்பொதே நாவில் எச்சில் ஊறியது. 'ரிசல்ட் பயத்தில் காலையில் இருந்து ஒன்றும் சாப்பிடாததை வயிறு நினைவூட்டியது. 'அடப் போடா, மானஸ்தனுக்கு பசி எம்மாத்திரம்?' என சமாதானப்படு த்திக் கொண்டான். 'ம்ம்ம்.....' என்னதான் திட்டினாலும் பல நாள் அம்மா பாசத்துடன் ருசியாக ஊட்டியது ஞாபகத்திற்க்கு வந்து கண் லேசாக கலங்கியது. உடனே சுதாரித்துகொண்டான். 'டேய் கோபால், நீ இப்போ சாதாரண மனிதன் இல்லை, பொது வாழ்க்கைனு வந்துட்டா நோ சென்டிமென்ட்ஸ்..."


மணி இப்பொது 6:23... இரயிலின் கடக்..கடக் சத்தம் கொஞ்சம் அருகில் கேட்டது. கோபாலது மனம் படக்..படக்..கென்று அடித்தது. இரயில் தன் மேல் ஏறும்போது எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தான். ரொம்ப பயமாக இருந்தது. கண்களை இறுக மூடிக் கொண்டான். ஒரு முறை கதவிடுக்கில் தெரியாமல் அப்பா கதவை சாத்த தன் கை நசுங்கியது ஞாபகத்திற்கு வந்தது. அந்த ஒரு வாரம் அப்பா சரியாக சாப்பிடாமல் வருத்தப்பட்டுக் கொண்டிருந்ததும் நினைவிற்கு வந்தது. விரலுக்கே அப்படின்னா, இப்போ என்னாகுமோ..என்று நினைத்துக் கொண்டான். 'அது சரி...ஆனா அளவுக்கு மீறி திட்டுறதுனால தானே இந்த கோளாறு..' உடனே அவன் மனம், 'அட பைத்தியக்காரா, நீ நல்லாப் படிச்சா உங்கப்பாவிற்கா பணம் கொட்டப் போகுது..உன் நல்லதுக்குத் தானேடா எல்லாம்' என்றது.

இரயிலின் படக்..படக் ஓசை அருகாமையில் கேட்டது. 'என்ன இந்த மனசு இப்படி மாத்தி சொல்லுது..ஒரு வேளை நாம எடுத்த முடிவு தப்போ!.. சேச்சே...இருக்காது...அப்படியே அப்பா அம்மா திட்டறது பரவால்லேன்னாக் கூட, பத்தாவது பெயிலானதுக்கப்புறம் வாழ்ந்த நம்ம கவுரவம் என்னாகிறது. ஊர் உலகம் என்ன் சொல்லும்...இது மானம் காக்கும் செயலல்லவா...???' 'மண்ணாங்கட்டி...!!!' அவன் மனம் திட்டியது..'ஏன்டா புண்ணக்கு, இப்போ நீ செத்தா என்ன உடனே 'GOPAL PASSED 10th STANDARD'னு சொல்லிடுவாங்களா 'GOPAL PASSED AWAY'னு தான் சொல்வாங்கடா லூசு...தொடர்ந்து வாழ்ந்தாலாவது எப்படியாவது ஜெயிச்சு பேர் வாங்கலாம். செத்தா ஜென்மத்துக்கும் நீ பத்தாவது பெயில் தானேடா...' மனசு குத்தி காட்டியது.

'அடப் படுபாவி மனமே! பயந்தாங்கொள்ளியான என்னை ரேக்கி விட்டுட்டு இப்போ தத்துவம் பேசறியா...ம்ம்..ம்ம்..என் வாழ்க்கையிலே எல்லாமே எனக்கு கோளாறுதான்..' ' கோளாறு உன் வாழ்க்கைல இல்லேடா மரமண்டை..எண்ணத்துலேதான். எத்தனையோ பேரால் சாதிக்க முடியும்போது உன்னால மட்டும் ஏன் முடியாது?'... கோபால் 'ம்ம் ம்ம் இப்போ நல்லா அட்வைஸ் பண்ணு...புத்தருக்கு ஒரு போதி மரம் மாதிரி நமக்கு இந்த தண்டவாளம் போல..'

மணி 6:24 இரயிலின் கடக்..கடக்..ஓசை வெகு அருகில் கேட்டது.. கோபால் எழுந்திருக்க யத்தனித்தான். ஆனால் பயத்தில் அவன் கை கால்கள் அனைத்தும் அசைக்க முடியாமல் ஒட்டிக்கொண்டது. 'ஆண்டவா! இதற்குப் பெயர்தான் மரண பயமா? என்னை மன்னிச்சிடு இறைவா...என்னை காப்பாத்திட்டா கண்டிப்பாக உன் துணையுடன் வாழ்ந்து காட்டுவேன்.' என்று வேண்டிக் கொண்டான். ஆனால் என்ன செய்வது?. இரயில் கடக்..கடக்..என்றபடியே வேகமாக வெகு அருகில் வந்து கொண்டிருந்தது. அதை விட வேகமாக கோபாலது மனம் படக்..படக்..என்று அடித்தது.

இன்னும் சில நொடிகள் தான். 'கடக்..கடக்.கடக்...கடக்.கடக்..கடக்.....' எதன் மீதோ மோதுவது போன்ற உணர்வு கோபாலுக்கு ஏற்பட்டது. 'அட இவ்வளவு லேசா இருக்கே...நாம் இப்போ செத்துட்டோமா..... இல்ல நான் காண்பதென்ன கனவா...' குழம்பினான் கோபால்.... தனது பலத்தையெல்லாம் திரட்டி தலையை தூக்கிப் பார்த்தான். பக்கத்து தண்டவளத்தில் இரயில் வேகமாக திருச்சியை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.... கடக்..கடக்..கடக்...கடக்...கடக்....

Comments

Maayaa said…
kadhai svaarasiyaamaa irukku..
kalakkunga!!

evlo naal kadhai? 2-3 eposodaa illa mega vaa??:)
Maayaa said…
kadhai en nagarave illa.. eppo next???
88Pro said…
I enjoyed your writing. You have lot of talent.
JB said…
good work :-) interesting read...
Dreamzz said…
ரிமைண்ட்ஸ் மீ ஆப் மைசெல்ப். நான் இரெண்டாவதுல :D ஹாஹா! suicide க்கு எல்லாம் ப்ளான் போடல ஆனா :)
Aravind said…
ivlo long-aa irukku sotry!! me hard-pressed for time...
sometime later, full-aa padichittu comment-aren! :D
That was a nice write up..
Paaka long'a irunthuchu but padikka padikka therila :)
Ithaye part'a potrukalamoo :)
Unknown said…
Idhu mega serial polirke! :(

Valakam pola adhey dialogue dhaan: Appalika vandhu padikren. :)
Raj said…
saar! a huge post written in tamil! :D bcos of my rsrch work, iam using ubuntu and the firefox browser is rendering the fonts a bit funnily for me! Like the "ai" in "thai", the "ay" in "thay" all get displayed in the wrong order! so, chinna posta irundha, ezhuthu kooti padichiduven...but periya post...font problem fix pannittudhan padikkanum! :D Sorry abt that!
Kuttibalu said…
appada yezhuthaa kooti padichitean... sirukadhai super..
Anonymous said…
super

Popular posts from this blog

AUTOGRAPH - Completed :)

Hi All :) Naan eppa intha story aarambichennu unga ellorukkum theriyum :D, ippa than adhai mudikkira velai vanthirukku.... Part I Part II nu vachikkama ore Part ah combine panniruken. Athunala erkanave neenga padichathu marubadi repeat aagum.... :D Also did some editing based on unga feedback... apadi irunthu kooda oru periyyyyyyyyya story ah vanthirukku.... This is also kind of preachy... So please bear :) Warning : This is not a spoof on Autograph film, although it might appear so,This is more like my earlier post 'J',I am Warning 2: Of course this story too contains a message and is intended to be preachy (Location : Egmore Railway station) Ellorukkum vanakkam... Naan thaanga Gopaalu (ada naan na naan ileenga... intha story's protoganist, avan unga kitta pesuranamam ). konja naal munnadi ennoda personal dairy ah purattitu irunthen ( ada enna ivanukku sontha paal pannai irukko ninaichukatheenga... annan konjam english la weak-u, diary than dairy nu solraaru) thideernu chi

Kindly bear with Me

* Update - Changed the title of the post :D for the post. General P.S : Hi all vanakkam... Erkanave birthday anniku first part post panninen..apuram mind thought odave ilae... oru vazhiya inniku than mudikka mudinjathu :D.. Thanks to my friend Dominic for patiently listening to me and making the flow in my thought normal :).thanks da Story's P.S : Actually intha kadhaikku "Kindly bear with me" apadinu than title vachen..appuram than thonichu ipathan tamil naatula mudhalla english la jore ah title vachittu apuram tamil la padutharangale..i mean tamil padutharangale.. infact appadi panna than sentiment ah padam hit aaguthu...so athe sentiment padi naanum tamil paduthitten :D.... namma blog um hit aava vendaamungala :D.. sari sari romba logic idikkkuthu nu thonichuna we can add a tag line like this... "Anbana karadi engalidam ullathu" - The tamil of "Kindly bear with me" a.l.a K.S.Ravikumar style in naming Varalaru Warning 1: ithu romba periya kadhai..

Thread of Love

Raksha bandhan – the cultural festival that glorifies sibling relationship and symbolizes the cultural harmony of our nation. It is my personal favorite, more than the imported days ala Friendship day, Valentine’s Day that we are now lapping up. Ironic, it should be, considering the fact that, being born on Valentine's Day I like the Raksha bandhan day more :D. Anyway I wanted to pen down (or rather type down??) my views on it in a beautiful, poetic way... I worked on it, but somehow my mind got stuck and what came out of it were only some clichéd lines, very much unlike of the feelings I wanted to express.. I gave up then, pacifying myself that it is not always necessary to decorate our feelings with beautiful words. If your feelings are genuine enough, we need not mind about our diction or grammar, we need not even make it good enough to appeal to people around... We don’t need to, really !... :) Every Guy might have his own perceptions about what is that, that makes him manly..